புவனகிரி : புவனகிரி பகுதியில் இரண்டாம் நாளாக நேற்று மழை பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
புவனகிரியிலிருந்து கடலூர் மற்றும் விருத்தாச்சலம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் துவங்கியது. மழை விட்டு விட்டு பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத் திலிருந்த மணல், கம்பிகள் மற்றும் கற்குவியல்களை முழுமையாக அகற்றவில்லை.
இந்நிலையில் இரண் டாம் நாளாக நேற்றும் மழை நீடித்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் இருந்த கற்குவியல்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப் பட்டது.
புவனகிரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் சாலையின் பின்புறம் கழிவு நீர் கால்வாய் வசதி இருந்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மிக நீளமான கழிவு நீர் கால்வாய் கட்டியதால், சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சிக்கிய கட்டடங்கள் தற்போது எவ்வித சேதமில்லாமல் தப்பின.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
No comments:
Post a Comment