
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனை மத்திய அரசும் ஏற்று, கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தரம் உயர்த்தப்பட்ட மதுரை சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா அடுத்த (செப்டம்பர்) மாதம் 11-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் யார்-யார் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
No comments:
Post a Comment