Islamic Widget

June 20, 2012

சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக சல்மான் அறிவிப்பு

Saudi Arabia names new crown prince Salman.சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபிய நாட்டின் பட்டத்து இளவரசராக பதவி வகித்து வந்தவர், நயீப் பின் அப்துல் அஜீஸ், 79. இவர், அந்நாட்டின் மன்னர் அப்துல்லாவின் ஒன்று விட்ட சகோதரர்.

நயீப், சவுதி அரேபிய உள்துறை அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, அவர் ஜெனிவா மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி இறந்தார். இதையடுத்து, புதிய பட்டத்து இளவரசராக அஜீசின்
சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சல்மான், தற்போது பட்டத்து இளவரசராகவும், துணை பிரதமராகவும், தொடர்ந்து ராணுவ அமைச்சர் பொறுப்பையும் வகிக்க உள்ளார்.

No comments:

Post a Comment