ஆங்கில நாளேடான எக்கணாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நிதிஷ்குமார், பிரதமர் பதவியில் மதச்சார்பற்ற ஒருவர்தான் அமரவேண்டும் என்றார். மேலும் பிரதமர் பதவிக்கு தாம் ஆசைப்படவில்லை என்றும் மிகப்பெரிய கட்சி ஒன்றிலிருந்துதான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் பீகார்
மாநில பாரதிய ஜனதா கட்சியுடன் தமக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. இந்த உறவை
சீர்குலைக்க வெளிசக்திகள் முனைந்தால் அதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று மோடியை
மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நிதிஷ்.
அண்மையில் பீகார்
மாநிலத்தில் சாதிய அரசியல் முதன்மைப் படுத்தப்படுவதால் அந்த மாநிலம் வளர்ச்சி
அடையவில்லை என்று மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நிதிஷ், ‘மோடி தனது சொந்த
வீட்டை முதலில் கவனிக்கட்டும்’ என காட்டமாக பதில் அளித்திருந்தார்.
No comments:
Post a Comment