Islamic Widget

June 23, 2012

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

சர்வதேச கரன்சி வர்த்தக சந்தையில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு நேற்று புதிய உச்சத்தை தொட்டது. அது ரூ.56.57 ஆனது. அதன்மூலம் ரூ.57ஐ நெருங்கியது. கடந்த ஆண்டில் ஒரு அமெரிக்க டாலர் ரூ.47 ஆக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து கடந்த சில வாரங்களாக 55 முதல் 56 வரை இருக்கிறது.சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் அமெரிக்க டாலரின்
மதிப்பு உயர்ந்தது.
கரன்சி வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் டாலரை அதிகளவில் வாங்கினர். இதனால், டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 56.57 ஆனது. இதுவரை இல்லாத அதிகம் இது. எனினும், அது வர்த்தக முடிவில் 15 பைசா வரை மீண்டது.

No comments:

Post a Comment