பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் மே 31-ம் தேதி அன்று ஆட்டோக்களை இயக்குவதில்லை என்று ஆட்டோ சங்கங்கள் முடிவு செய்துள்ளன. வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மே 31-ல் கடையடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.54 வரை உயர்த்தியுள்ளதால் ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தியும், பெட்ரோல் பொருள்கள் மீதான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையில் மே 31-ல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி ஆட்டோக்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடையடைப்பு:
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடு முழுவதும் மே 31-ல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வணிகர்களும் பங்கேற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜூன் 1-ம் தேதி திருமண முகூர்த்த நாளாக இருப்பதால் மக்கள் வசதியைக் கருதி மே 31-ம் தேதி 4 மணி வரை கடைகள் அடைக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment