Islamic Widget

August 23, 2011

தி.மு.க., அரசு செய்ய தவறிய பணிகளை ஜெ., நிறைவேற்றுகிறார் : அமைச்சர் செல்வி பெருமிதம்

சிதம்பரம் : ""தி.மு.க., ஆட்சியில் செய்யத் தவறிய பணிகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது'' என சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார். சிதம்பரம் பஸ் நிலையத்தில் தென்புறம் இயற்கை இடர்பாடுகள் திட்ட நிதி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா மற்றும் 14 புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் தொடக்க விழாவும் நடந்தது. சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கி புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கி வைத்து பேசியதாவது: தி.மு.க., அரசு கடந்த காலங்களில் செய்யத் தவறிய ஏராளமான பணிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது. அதற்கு சிதம்பரம் பஸ் நிலையம் உதாரணமாக கொள்ளலாம். போக்குவத்துத் துறை கடனில் மூழ்கிக் கிடந்தது. ஊழிர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. உதிரி பாகங்கள் கூட வாங்க முடியாத நிலை உருவானது. ஆனால் ஜெயலலிதா முதல்வதராக பொறுபேற்ற பிறகு போக்குவரத்துக் கழகத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளார். 3,000 அரசு பஸ்கள் இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என பேசினார்.

சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் சம்பத், பஸ் நிலையத்தை திறந்து வைத்து பேசியதாவது: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அதனால் அவர் பொறுப்பேற்ற குறைந்த நாட்களான 97 நாட்களில் மக்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 150 நகராட்சிகள், 551 பேரூராட்சிகள், 10 மாநகராட்சிகளில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த 5,800 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளார். சிதம்பரம் நகரில் தி.மு.க., அரசால் கைவிடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க விரைவில் பெரிய அளவிலான நிரந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.
விழாவில் எம்.எல். ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், முருகுமாறன், நகர மன்ற தலைவர் பவுஜியாபேகம், கலெக்டர் அமுதவல்லி, கமிஷனர் மாரியப்பன் பங்கேற்றனர். விழாவின்போது, சிதம்பரம் - சென்னை, அண்ணாமலைநகர் - சென்னை, சிதம்பரம் - புதுச்சேரி, திட்டக்குடி- புதுச்சேரி, விருத்தாசலம் - புதுச்சேரி, காட்டுமன்னார்கோவில் - சென்னை, சிதம்பரம் - கடலூர், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை, திட்டக்குடி - காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் - சேலம், அண்ணாமலைநகர் - சேலம், கடலூர் - பூவாலை, கடலூர் - நெல்லிக்குப்பம் ஆகிய 14 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கி வைக்கப்பட்டன.


source: dinamalar

No comments:

Post a Comment