Islamic Widget

August 30, 2011

பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ஆகஸ்ட் 02 செவ்வாய்கிழமை அன்று முதல் ரமளான் நோன்பு தொடங்கியது, எனினும் சிலர் ஜுலை மாதம் 31 ஞாயிற்றுக்கிழமையும், சிலர் சவூதி அரேபியாவில் காணப்பட்ட பிறையின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் ரமளானை மாதத்தினை அடைந்து அன்று முதல் நோன்பு நோற்க துவங்கினார்கள்.

இந்நிலையில், பரங்கிப்பேட்டை ஹிஜ்ரா கமிட்டி அமைப்பினரால் ஈகைத்திருநாள், இன்று பரங்கிப்பேட்டை நகரில் கொண்டாடப்பட்டது. கலிமா நகரில் காலை 7.10 மணிக்கு நடைப்பெற்ற



தொழுகைக்கு தலைமை வகித்த செய்யத் கபீர் ஜான், தொழுகையின் முதல் ரக்காத்தில் ஸப்பி ஹிஸ்ம…(மிக்க மேலானவன்) என தொடங்கும் அத்தியாயத்தையும்…இரண்டாவது ரக்காத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்…. (ஏகத்துவம்) என தொடங்கும் அத்தியாயத்தையும் ஓதி தொழுகை நடத்தினார். தொழுகைக்கு பின்னர் கு.நிஜாமுத்தீன் ஹிஜ்ரா காலண்டரின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்..







நன்றி: mypno

No comments:

Post a Comment