Islamic Widget

August 30, 2011

வாகனங்களில் முறையான பதிவு எண் பலகை பொருத்தி விட்டீர்களா?



வாகன பதிவு எண் பலகையில், தங்கள் விருப்பப்படி எண்களை எழுதியிருந்தால், அவற்றை வரும் 31ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுங்கள். செப்.1ம் தேதி முதல், முறையான பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவுச் சான்றினை, போக்குவரத்துத் துறை தற்காலிகமாக ரத்து செய்யும்.
மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன்படி, அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும். இந்த விதிப்படி கூறப்பட்டுள்ள அளவில் பதிவு எண் எழுதாமல், பலர் தங்களது விருப்பப்படி எழுதிக் கொள்கின்றனர். பலர், தங்களது விருப்ப அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகளை பதிவு எண் பலகையில் ஒட்டி வைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர், தங்களது நியூமராலஜிபடி எண்களை எழுதி வைத்துக் கொள்கின்றனர். சிலர், ஆங்கில வார்த்தைக்கு பதிலாக தமிழ் வார்த்தைகளை எழுதி, எண்களையும் தமிழ் எண்களாகவும் எழுதி வைத்துக் கொள்கின்றனர்.
வாகன பதிவு எண்கள் தெளிவாக இல்லாததால், அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. விபத்து, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட சமயங்களில், அடையாளம் தெரியாமல் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதையடுத்து, மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவில் தான், எண்களை எழுத வேண்டும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முறையான பதிவு எண் பலகையை, இம்மாதம் 31ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். செப்.1ம் தேதிக்குப் பின்னர், முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களின் பதிவுச்சான்று, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 53ன்படி, தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கெடு முடிவடைய, இன்னும் ஏழு நாட்களே உள்ளன. வாகன ஓட்டிகள், போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அளவின்படி நம்பர் பிளேட்களை உடனடியாக மாற்றினால் தான், பதிவுச்சான்று ரத்து நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
பெயின்டா? ஸ்டிக்கரா? :
மத்திய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன பதிவு எண் பலகையில், பெயின்ட் மூலம் தான் எழுத வேண்டும். ஆனால், தமிழக போக்குவரத்து துறை உத்தரவில், பதிவு எண் அளவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை மத்திய மோட்டார் வாகன சட்டப்படி பெயின்ட் மூலம் எழுத வேண்டுமா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பெயின்ட் என்றால் எளிதில் அழியாமல், நீண்ட நாட்களுக்கு வரும். அதுவே ஸ்டிக்கர் மூலம் எண்களை ஒட்டினால், விரைவில் உதிர்ந்து விடும்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'தற்போது, பதிவு எண்களை முறைப்படுத்தவே இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. பெயின்ட் அல்லது ஸ்டிக்கர் மூலம் எண்களை எழுதிக் கொள்ளலாம்' என்றார்.
Source: Dinamalar

No comments:

Post a Comment