நாட்டில் ஊழலை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 10வது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் இன்று (25.08.2011) டெல்லி சென்று அன்னா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உண்ணவிரதத்தில் கலந்து கொண்டார்.
ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் மேடைக்குச் சென்ற நடிகர் விஜய்,
’ஊழலை ஒழிக்க ஹசாரே அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதம், நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில், புது எழுச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்த எழுச்சியை கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனித்து வருகிறார்கள். இது வெற்றி பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள்.
வெற்றி கிடைத்தால் காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு இது மேலும் வலு சேர்க்கும். இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்பது நமது கடமை, இதில் நானும் பங்கேற்று எனது கடமை செய்துள்ளேன்.
இந்த உண்ணாவிரத போராட்டம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஹசாரே அவர்களின் உடல்நலமும் முக்கியம், அவருக்கு ஆரோக்கியமான உடல்நிலையை
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நானும், எனது மக்கள் இயக்கமும் முழு ஆதரவு அளிக்கும்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment