தனது தந்தை ஒசாமா பின்லேடனைப் பிடிக்க மாஜி அமெரிக்க அதிபர் புஷ் போட்ட மாஸ்டர் பிளான் குறித்து அவரது மகன் ஒமர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான இரட்டை கோபுரம் அல்கொய்தாவினர் தகர்த்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கு அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. பின்லேடனைப் பிடிக்க அப்போதைய அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சிக்குப் பலன்கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க மாஜி அதிபரான புஷ் தனது பதவி காலத்தின் கடைசி நாளில், பின்லேடனைப் பிடிக்கும் முயற்சியாக, அவரது மகன் ஒமரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து ஸ்பானீஸ் தினசரி பத்திரிகையான லா-வாங்கூராடிய எனும் பத்திரிகைக்குப் பின்லேடனின் நான்காவது மகன் ஒமர் (29) அளித்துள்ள பேட்டியில், கடந்த 2009-ம் ஆண்டு கத்தார் தலைநகர் டோக்கோ வந்திருந்த அமெரிக்க மாஜி அதிபர் புஷ், என்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, பின்லேடனைப் பிடித்து தர உதவுமாறு கேட்டுக்கொண்டார். "இதற்காக எந்த நிபந்தனையும் தாம் விதிக்கமாட்டேன்" என்றார்."ஜார்ஜ் புஷ்ஷின் இந்தத் திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. பின்லேடன் ஒரு பயங்கரவாதி தான்; அவரது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை. இன்று வரை நான் அவரிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொண்டதில்லை. எப்படியாயினும் அவர் என்னுடைய தந்தை. ஆகவே எனது தந்தையைப் பிடிக்க உதவமாட்டேன்" என்று அவர் கூறியதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒமர் கூறிய இந்த அறிக்கைக்குக் கருத்து கூற மறுத்துவிட்டது.

No comments:
Post a Comment