தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் கூட்டத்தில் பேசும்போது, "இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது. தேர்தலுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தோடு கைதாவார்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதியை அதிரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், ராமராதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை தொகுதி தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரகுமானை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது, "அமைச்சர் தங்கவேலன், குடிசை மாற்றுத் துறை தலைவராகத் தான் உள்ளார். அவர் அமைச்சரே இல்லை.ஒன்றுமே செய்யாமல், சொகுசுக்காக சைரன் காரில் வலம் வருகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம், எப்படி ஜெயித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயித்ததற்குப் பெயர், 'சிதம்பரம் ரகசியம்'. அழகிரி பாதுகாப்பை எடுத்ததால், அழகிரி, அழுதகிரியாக உள்ளார்.தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னையைச் சுற்றி, 150 கி.மீ., தொலைவில் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர். ஆனால், தற்போது சென்னை பகுதி சுற்றுவட்டார மக்கள் தண்ணீருக்காக தவிக்கின்றனர்.கல்விகற்க நவீன முன்னேற்றங்கள் அடைந்துள்ள இக்காலத்தில்கூட தமிழகத்தில், பள்ளிக் குழந்தைகள் மரத்தடியில் கல்வி கற்பது கேவலமாக உள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பெயரில், தனியார் மருத்துவமனைக்குக் கிராம மக்களை அனுப்புகின்றனர்.அந்த ரூபாயில், சிறிய சிகிச்சைக்கூட செய்ய முடியவில்லை. சிகிச்சைக்காக, ஸ்டாலின் லண்டன் செல்கிறார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்னாச்சு? அதில் சிகிச்சை பெறுவதை விட்டு ஏன் லண்டன் செல்ல வேண்டும்?அவர் சிகிச்சைக்காக செல்லவில்லை ரூபாய் நோட்டை மாற்ற செல்கிறார்.கருணாநிதி, மக்களுக்குச் சேவை செய்ய வரவில்லை; குடும்பத்திற்குச் சேவை செய்யவே வந்துள்ளார். காங்கிரஸ் கூட்டணிக்கு, 63 சீட் கொடுத்ததின் ரகசியம் என்ன தெரியுமா? குடும்பத்தினரைக் கைது செய்யமாட்டார்கள் என்பதற்காக தான்.தேர்தல் முடிவுக்குப் பின், கருணாநிதி குடும்பத்துடன் கைதாவது உறுதி. தமிழர்களின் உணர்வை கச்சத்தீவு மூலம் தாரை வார்த்து கொடுத்தார். இலங்கை கடற்படையால், 550 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது.எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியில் கூட்டணி வைத்திருப்பது, பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்ற பயத்தில், சில, டிவிகளில், விஜயகாந்த் தப்பா பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதும், மீண்டும் மீண்டும் காட்சிகளைப் போடுவதுமாக உள்ளனர்." என்று அவர் பேசினார்.

No comments:
Post a Comment