அஸ்ஸலாமு அழைக்கும். (வரஹ..)
PIA ரியாதின் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் Z.முகம்மது நியாஸ் தலைமையில் 22-03-2012 வியாழகிழமை இரவு இஷாவுக்கு பிறகு சகோதரர் முபாரக் இல்லத்தில் அல்லாஹுவின் உதவியால் இனிதே நடைபெற்றது.
துணை தலைவர் I.சாகுல் அவர்கள் கிரத் ஓதி துவக்கி வைத்தார்
இந்த கூட்டதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜமாஅத் நிர்வாகத்துக்கு வாழ்த்தும்,தார்மிக ஆதரும் தெரிவிக்கபட்டது.
2. ஊரில் முஸ்லிம் தெருக்களில் வெளிமாநிலத்து காரர்களுக்கு வீடு கொடுப்பது சம்பந்தமாக கவலை தெரிவிக்கபட்டது மேலும் இந்த விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாமத்தை வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
3. கடலூரில் இருந்து பரங்கிபேட்டை வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் கொத்தட்தை வழியாக பரங்கிபேட்டை வராமல் செல்வதற்கு ஜமாஅத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளபட்டது.
4. ஊரில் சிறுவர்களுக்கு ஓதிகொடுக்கும் காலை பள்ளி கலாச்சாரம் அழிந்து வருவது பற்றியும் விவாதிக்க பட்டு.ஜமாஅத் சார்பாக ஒரு பள்ளி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்துவது என்றும் முடிவுஎடுக்கபட்டது.
இதன் பின்பு கேக் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது
இந்த கூட்டதில் ரியாத் வால் பரங்கிபேட்டை சகோதரர்கள் கலந்துகொண்டனர்
தகவல்
z.முஹம்மது சாதாத்
No comments:
Post a Comment