Islamic Widget

March 07, 2012

இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு


Iran urges India to invest in its electricity sectorடெஹ்ரான்:எரிவாயு குழாய் திட்டம் முடங்கிய சூழலில் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை குறித்து ஈரான் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் எண்ணெய்துறை அமைச்சர் மஜீத் கூறியுள்ளார்.
எரிசக்திகளுக்காக புதிய திட்டங்களை துவக்கும் இந்தியாவுக்கு ஈரானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஈரானில் இருந்து மின்சாரத்தை இறக்குமதிச் செய்வதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அஜண்டாவில் இவ்விஷயம் தொடர்பாக உட்படுத்தியிருப்பதாகவும் ஈரானின் அமைச்சர் கூறுகிறார்.
ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் புதிய எரிசக்தி நிலையம் நிறுவ திட்டமிட்டுள்ளதாக மஜீத் கூறினார்.
விவசாயம், எண்ணெய், இயற்கை எரிவாயு, பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும், ஈரானும் கடந்த ஜனவரியில் தீர்மானித்திருந்தன.
டெஹ்ரானில் இந்திய தூதர் சி.பி.ஸ்ரீவஸ்தவா, ஈரான் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு தலைவர் மாஜித் ஹிராயத் ஆகியோர் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment