கர்ப்பிணியாக இருக்கின்ற பெண்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்தினால் பேராபத்து காத்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்ப்பிணியாக இருக்கும் போது அம்மாக்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்தினால் பிறக்கின்ற குழந்தைகள் hyperactive பிரச்சினையால் அதாவது உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கையடக்கத் தொலைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளைக்கு ஆபத்து விளைவிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது காலப்போக்கில் புத்திக் கூர்மை இல்லாத மந்த நிலை, பதட்டம் மற்றும் மனக்கவலை போன்றவற்றுக்கு இடமளிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஜேல் பல்கலையின் ஆராய்சிக் குழுவின் தலைவரான Hugh Taylor என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் மேற்படி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
ஜேல் பல்கலையின் விஞ்ஞானிகள் முதலில் எலியைக் கொண்டு தான் ஆய்வை நடாத்தினர். இதே வழியில் தான் மனிதனும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment