Islamic Widget

March 19, 2012

ஜமாஅத் – புதிய நிர்வாகம் – முதல் செயற்குழு


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு பிறகு பரபரப்புடன் முதல் செயற்குழுக் கூடியது. ஜமாஅத் தலைவர் டாக்டர்.நூர் முஹம்மது தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிகள் – பைத்துல்மால் (பொருளகம்) நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்த தலைவர் தொடர்ந்து ஜமாஅத் முன்னெடுக்கப் போகும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கினார்.

  • இளைஞர்கள் நலன்
  • பெண்கள் நலன்
  • கல்விக்குழு
இக்குழுக்களின் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசிடமிருந்து சமுதாயத்திற்கு கிடைக்கும் திட்டங்கள் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும் பேசினார்.
காஸ் வினியோக பிரச்சனையில் இனி காஸுக்கு 410க்கு மேல் ஒரு பைசாக்கூட கொடுக்க வேண்டாம். வினியோகத்தில் டெலிவரி பாய் பிரச்சனை பண்ணினால் ஜமாஅத் தொடர்புக் கொண்டு கூறுங்கள் என்றார் அவரைத் தொடர்ந்து ஜமாஅத் பொது செயலாளர் O.முஹம்மது கவுஸ், ஜமாஅத் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இதுவரை அமுல்படுத்திய திட்டங்களை விளக்கினார். பெறப்பட்ட மனுக்கள், செய்யப்பட்ட உதவிகள், தீர்க்கப்பட்ட வழக்குகள், மருத்துவமுகாம், சட்ட விழிப்புணர்வு முகாம் போன்றவை விளக்கப்பட்டன.

ஜமாஅத் பொருளாளர் M.K கலிகுஜ்ஜமான் கடந்த ஜமாஅத் நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட நிதி, தற்போது ஜமாஅத்திற்கு கிடைத்துள்ள நன்கொடைகள் பற்றி கூறி, செலவீனங்களையும் வாசித்து ஒப்புதல் பெற்றார்.
ஜமாஅத்தின் துணைத் தலைவர்களின் ஒருவரான M.S அலி அக்பர் புதிய குழுக்களை செயற்குழுவில் வைத்தார்.
  • ஷரியத் குழ
  • சட்டக் குழு
  • இளைஞர் நலக்குழு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பொறுப்புதாரிகளையும் வாசித்தார்.


மிக அமைதியாக நடந்து வந்த செயற்குழுவின் இறுதியில் பரங்கிப்பேட்டையை சுற்றி வளர்ந்து வரும் கம்பெனிகளுக்கு உள்ளுரில் வீடுகளை வாடகைக்கு கொடுப்பது சம்பந்தமாக வந்த மனுவையும் – சவுதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் கம்பெனிக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பது பற்றி வைத்த கோரிக்கையையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டவுடன் சலசலப்பு ஏற்பட்டு கூட்டம் முடிந்தது.


 நன்றி:pnotimes

No comments:

Post a Comment