நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்றது.
புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள் இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட , தக்க துணையின்றிப் பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத நான்கு பெண்மணிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.
இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர் ஹைதர் அலி ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள் இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.
No comments:
Post a Comment