தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யப்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் வழக்கில் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
தாசில்தார், காவல்துறை, அரசு அதிகாரிகளுக்குச் சம்பளத்தை உயர்த்தி பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அவர் மனுவில் கூறியிருந்தார். தேர்தலைக் கருத்தில் கொண்டே அதிகாரிகளின் சம்பளத்தைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளதாகவும் வழக்கறிஞர் அய்யப்பன் மனுவில் தெரிவித்திருந்தார்.தேர்தல் பணியில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்வதாகவும், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment