Islamic Widget

March 28, 2011

மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்., கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை.
இதனால் இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் தேர்தல் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.இது குறித்து பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., தலைவர் செய்யது அலி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் மற்றும் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார்.


Source: Dinamalar

No comments:

Post a Comment