Islamic Widget

November 07, 2010

பரங்கிப்பேட்டையில் கடல் சீற்றம் படகில் அடிபட்டு மீனவர் காயம்

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இப்பகுதியில் உள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.




இதற்கிடையே புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜி(35) என்பவர், கடல் ஓரத்தில் உள்ள படகை கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென படகு அவர் மீது கவிழ்ந்தது.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.

No comments:

Post a Comment