சிதம்பரம் : கடலூர் மற்றும் சிதம் பரத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா நாளை (16ம் தேதி) நடக்கிறது. கடலூர் மற்றும் சிதம் பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல் லூரி எதிரில் 68 லட்சம் ரூபாய் செலவிலும், கடலூர் அடுத்த கேப்பர் மலையில் 5 ஏக்கரில் 1.37 கோடி ரூபாய் செலவிலும் புதிய கட்டடங்கள் கட் டப்பட்டன. இவ்வலுவலக கட்டடங்கள் திறப்பு விழா நாளை (16ம் தேதி) கடலூரில் மாலை 3 மணிக்கும் இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சிதம்பரத்திலும் நடக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமையில் புதிய கட்டடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் ராசாராம், கலெக்டர் சீத்தாராமன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதிய அலுவலகம் திறப்பு விழாவையொட்டி பழைய அலுவலகத்தில் இருந்து பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜிகள் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
Source:dinamalar
No comments:
Post a Comment