சட்டத்திற்கு உட்பட்டு இந்த கண்காணிப்பு கேமராக்களை பிடிஎன் என்ற தனியார் பேருந்து நிறுவனம் பொருத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயம் -காட்பாடி இடையிலான பேருந்துகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஒரு பேருந்தில் மொத்தம் 6 இடங்களில் ரகசியக் கேமராக்களை வைத்துள்ளனர். இதன் மூலம் முழுப் பேருந்தும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் வருகிறது. பயணிகள் நடமாட்டம், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள், வித்தியாசமான செயல்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் டிரைவர், தனக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள டிவி மூலம் அறிய முடிகிறது.
குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இதை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்த பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேருந்தில் கேமரா வைத்துக் கண்காணிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு இதற்கு அனுமதித்துள்ளதா என்பது தெரியவில்லை.

No comments:
Post a Comment