Islamic Widget

October 14, 2010

குஜராத் கலவரம் : விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சருக்கு சம்மன்!

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில உள்துறை முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜபாடியாவுக்கு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை அடுத்து அம்மாநிலம் முழுவதும் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதிகள் நாணாவதி மற்றும் அக்ஷய் மேத்தா ஆகியோர் அடங்கிய விசாரணை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. உள்துறை முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜபாடியாவிடம் அக்டோபர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜன் சங்கர்ஷ் மஞ்ச் முன்னர் கோரி இருந்ததை விசாரணை ஆணையம் முன்னர் ஏற்க மறுத்திருந்தது. இந்நிலையில் தற்போதைய விசாரணை குறித்து இந்த அமைப்பிற்குத் தகவல் தரப்படவில்லை என்று அந்த அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறியுள்ளார்.

விசாரணை ஆணையத்தின் இந்த நடவடிக்கை எதிர்த்து, விசாரணையின்போது தாமும் உடன் இருக்க வேண்டும் என்று கோரி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வியாழக் கிழமையன்று வழக்கு தொடர உள்ளதாகவும் முகுல் சின்ஹா கூறியுள்ளார்.
குஜராத் கலவரம் குறித்து புலணாய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழுவினருக்கு கிடைத்துள்ள புதிய தகவல்களை அடுத்து உள்துறை முன்னாள் அமைச்சரை நாணாவதி மேத்தா விசாரணை ஆணையம் முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.




Source: inneram

No comments:

Post a Comment