டென்மார்க்கின் 'ஜெலாண்டன் போஸ்டன்' என்ற நாளிதழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முகமது நபியை கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர். டென்மார்கின் மதவெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 6பல நாடுகளில் டென்மார்க் பொருட்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து டென்மார்க்கின் பொருளாதரம் படுவீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக வளைகுடா மற்றும் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் டென்மார்க் பொருட்கள் விலைபோகாமல் தேங்கியதைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளுடனான வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளைச் சமாளிக்க கருத்துசுதந்திரம் என்று இருதலைக்கொள்ளி எறும்பாய் டென்மார்க் அரசாங்கம் திணறியது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் வகையில் டென்மார்க் அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் லீன் எஸ்பெர்சன் எகிப்தின் அல் அஸார் பல்கலைக் கழகத்தில் நடந்த கலந்துரையாடலின்போது முகமது நபியை கேலிச் சித்திரம் வரைந்ததற்காக டென்மார்க் அரசின் சார்பில் மன்னிப்பு கோரினார். கலந்துரையாடலின்போது அல் அஸார் பல்கலைக் கழக தலைமை இமாம் அகமது அல் தாயேப் உடனிருந்தார்.
அமைச்சர் லீன் செய்தியாளர்களுடன் பேசும்போது "டென்மார்க் நாடு முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் உறுதியாக உள்ளது. கருத்துச்சுதந்திரத்தை மதிப்பதோடு மதங்கள்மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என்றார். மேலும், மதரீதியிலான மோதல்களுக்கு வழிவகுக்கும் அத்தகைய விசமத்தனங்களுக்கு எதிராக டென்மார்க் அரசு நிறைவேறியுள்ள சட்டங்களைப் பற்றியும் பட்டியலிட்டார்.
எனினும் கேலிச்சித்திரங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் எதிர்வினைகளால் எழுந்த கோபம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அல் அஸார் பல்கலைக் கழக தலைமை இமாம் அகமது அல் தாயேப் மன்னிப்புக்கோர மறுத்து விட்டதோடு, டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான கேலிச்சித்திரங்கள் தனிநபர்களின் செயல் என்றும் அது டென்மார்க் மக்களையோ அல்லது அரசையோ சார்ந்ததல்ல என்றும் அமைச்சர் லீன் தெரிவித்ததாகச் சொன்னார்
Source: inneram.com
October 15, 2010
முகமது நபியை கேலிச்சித்திரம் வரைந்தற்காக டென்மார்க் அமைச்சர் மன்னிப்பு கோரினார்
Labels:
உலகம் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
No comments:
Post a Comment