பெரம்பலூர்: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் கருவியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்-தமிழ்செல்வி தம்பதிகளின் மகன் கலைமணி (26). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பம்புசெட் மோட்டார் பழுது பார்க்கும் எலக்டரானிக் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
எதையாவது சாதிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி செல்போன் மூலம் ஏதாவது கருவியை தயாரிக்க வேண்டும் என யோசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை நாளிதழில்களின் வாயிலாக தெரிந்த கொண்ட கலைமணி திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இவரது திட்டத்தின்படி ஒரு மொபைலை விலைக்கு வாங்கி அதை ஒரு பாக்ஸில் பொருத்தி காந்தம் இரும்பு ஆகியவற்றின் உதவியுடன் மொபைலில் இருந்து ஒயர் இணைத்து கதவில் காந்தம் மற்றும் இரும்பு தகடை பொருத்தி மொபைலில் தனது நம்பரை டயல் நம்பராக பதிவு செய்து இயக்கி பார்த்தார்.
கதவை திறந்த உடன் ஏற்கனவே பதிவு செய்திருந்த தனது நம்பருக்கு போன் வந்தது. திருட்டை தடுக்கும் புதிய கருவியை கண்டுபித்துள்ள கலைமணி இது குறித்து கூறியதாவது:கதவில் மொபைலை பொருத்திய பின் நம்பரை டயல் செய்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்று விடலாம். யாரேனும் கதவை திறந்தால் நாம் எங்கு இருந்தாலும் நமது மொபைலுக்கு அழைப்பு வரும். இதன் மூலம் திருடர்கள் வீட்டில் புகுந்து வீட்டார்கள் என போலீஸ் மற்றும் பக்கத்து வீட்டினருக்கு தகவல் தெரிவித்து திருட்டை தடுக்கலாம். மேலும் விவசாய குடும்பத்தில் நான் கடந்த ஆக., மாதத்தில் ஒரு நாள் எங்களது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தேன். பம்புசெட் மோட்டாரை போட்டு விட்டு வயல் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.
பின்னர் சிறிது நேரத்தில் தண்ணீர் பாய்ச்சிய வயலை வந்து பார்த்தபோது தேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் வயலில் பாய்ந்து இருந்தது. இதைபார்த்த நான் வயலில் தேவையான அளவு தண்ணீர் உள்ளதை கண்டறியும் கருவையும் கண்டுபிடித்துள்ளேன். திருட்டை கண்டுபிடிக்கும் கருவியை சிறிது மாற்றம் செய்து இந்த கருவியை வயலில் எந்த இடத்தில் தண்ணீர் செ ன்றடைய வேண்டுமோ அந்த இடத்தில் கருவியை வைத்து நம்பரை டயல் செய்து விட்டால் தண்ணீர் அந்த இடத்தை வந்தடைந்தவுடன் மொபைலுக்கு அழைப்பு வரும்.
Source: tamilcnn
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை
- சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாரிகளை தாக்கிய இளம்பெண்
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
- புவனகிரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா? - சஞ்சய்தத்!
- ஜெமிலா டயா்ஸ் திறப்பு!
No comments:
Post a Comment