கடலூர்: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சலுகை விலையில் சிமென்ட் விற் பனை துவங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட் டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிமென்ட் மூட்டை 200 ரூபாய்க்கு சலுகை விலையில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிதாக 1,000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்கள் சலுகை விலையில் சிமென்ட பெற்றிட உரிய வரைவு காசோலை மற் றும் ரேஷன் கார்டு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அருகில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து 8 தவணைகளில் சிமென்ட் மூட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூட்டை சிமென் டுகளை நேரடியாக பணம் செலுத்தி பெறலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் கடலூர் (04142-233301), குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி (04142-253796), விருத்தாசலம் (04143-238382), சிதம்பரம் (04144-230802), காட்டுமன்னார்கோவில் (04144-262013), திட்டக்குடி (04143-255214) ஆகிய தொலைபேசிகளிலோ அல்லது கடலூரில் உள்ள மண்டல மேலாளரை (04142-221621, 221622, 221623) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை
- சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாரிகளை தாக்கிய இளம்பெண்
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
- புவனகிரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா? - சஞ்சய்தத்!
- ஜெமிலா டயா்ஸ் திறப்பு!
No comments:
Post a Comment