Islamic Widget

August 11, 2010

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்துக்களிடம் கொள்ளை


பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிந்து மாகாணத்தில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 1800 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் இந்துக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கோஷ்பூர், கந்தகாட் மற்றும் கள்ம்பூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 95 கடைகள் மற்றும் 50 வீடுகளில் கொள் ளையடித்துள்ளனர்.

எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்துக்களின் குடியிருப்புகளை ஆக்கிர மிப்பதே அவர்களின் நோக்கம் என்றும் வாகனங்களும் திருடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment