Islamic Widget

August 24, 2012

குருத்வாராவில் பெருநாள் தொழுகை: முஸ்லிம்களை நெகிழவைத்த சீக்கியர்கள்


Eid prayer offered in Sikh Gurudwaraடேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள காந்தி ஈத்கா திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் பெருநாள் தினத்தில் மழை பெய்து மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.
இந்நிலையில் இது குறித்து அறிந்த சீக்கியர்கள் தங்கள் குருத்வாராவில் வந்து தொழுகை நடத்துமாறு முஸ்லிம்களை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற முஸ்லிம்கள் ஜோஷிமத்தில் உள்ள குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்தினர். அதன் பிறகு முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஈத் பெருநாள் கொண்டாட்டத்தில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.
இதுக்குறித்து கருத்து தெரிவித்த மார்க்க அறிஞர் ஆஸிஃப், “சீக்கியர்களின் தாராள குணத்தை பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
பன்முகத் தன்மை கொண்ட தேசத்தில் மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பாசிச சக்திகள் பிரிவினையை தூண்டும் வேளையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் முஸ்லிம்களும், சீக்கியர்களும் நடந்துகொண்ட முறை இந்தியாவின் மதசார்பற்றத் தன்மை உயிருடன் இருப்பதை நிரூபிப்பதாக அமைந்தது.

1 comment:

  1. இதை தான் மத(ம்)த்திற்கு அப்பாற்பட்ட மனித நேயம் என்பது! வாழட்டும் மனித நேயம்!!
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

    ReplyDelete