Islamic Widget

July 09, 2012

புதுச்சேரி: வீட்டுக்குள் படையெடுத்தன பாம்புகள்

புதுச்சேரி - பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். அந்தப் பாம்புகளே படையெடுத்து வந்தால் எப்படியிருக்கும்?

பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவநேசன் என்பவர் வீட்டில் கண்ணாடிவிரியன் வகையைச் சேர்ந்த கொடிய விஷப் பாம்புகள் படையெடுத்து வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்ட்து. இது பற்றி கூறப்படுவதாவது:ஏஎஃப்ட்டீ மில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற 60 வயதான சிவநேசன்  மகன் இளம்பரிதி மற்றும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.  இன்று காலை வீட்டு படிக்கட்டில் ஒரு சாண் நீளமுள்ள பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ணுற்ற இளம்பரிதி உடனடியாக அதை கம்பால் அடித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் படிக்கட்டு அருகில்  இருந்த பொந்தில் இருந்து குட்டி பாம்புகள் படையெடுத்து படிக்கட்டில் ஊர்ந்து ஏறின.
பாம்புகள் படையாக வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவநேசன் குடும்பத்தினர் அலறியடித்தபடி வெளியில் ஓடி வந்தனர். அலறலைக் கேட்டு உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தவர்கள் 15 பாம்பு குட்டிகளை அடித்துக் கொன்று எரித்தனர்.  பின்னர் இது பற்றிய தகவலறிந்த வனத்துறை ஊழியர் சண்முகம் விரைந்து வந்து படிக்கட்டு துளைகளில்  இருந்து வெளி வந்த 30க்கும் அதிகமான பாம்புகளை பிடித்து பிளாஸ்டிக் வாளியில் போட்டார்.
பின்னர்  படிக்கட்டு உடைக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பிளாஸ்டிக் குழாயில் இருந்து பாம்புகள் வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
 வனத்துறை ஊழியர் சண்முகம் கூறுகையில், பிடிபட்ட பாம்புக் குட்டிகள் கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தவை என்றும் இவை கொடிய விஷம் கொண்டவை என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment