
குஜராத்தில் கடந்த 2009-ம் ஆண்டில், மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தங்களை டெண்டர் இல்லாமல் ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாக இர்ஷாத் மராடியா என்பவர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மாநில மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கியை விசாரிக்க உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
இதனிடையே, அமைச்சர் சோலங்கி மீது வழக்கு தொடர அனுமதி தரத் தேவையில்லை என்று அமைச்சரவை முடிவு செய்தது. அதையும் மீறி, அவர் மீது வழக்கு தொடர மாநில ஆளுநர் கமலா பேனிவால் நேற்று(திங்கள்கிழமை) அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர், காவல் துறையிலோ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அமைச்சர் மீது இனி புகார் அளிக்க முடியும். ஆளுநரின் நடவடிக்கை, மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment