Islamic Widget

June 02, 2012

ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை


முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு கெய்ரோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்ற வருடம் கெய்ரோவில் நடைபெற்ற ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிகெதிரான ஆர்பாட்டத்தில் பொது மக்கள் பங்கேற்ற போது சுமார் 850 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் எழுச்சிக்கு பிறகு முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யபட்டு விசாரிக்க்பட்ட அவர் மீது ஆர்பாட்டக்காரர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.மேலும் முபாரக் அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஹபில் அல் அத்லிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குற்றம் நிருபிக்கப்படாததால் முபாரகின் இருமகன்களும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளியான உடன், நீதிமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் திரண்டு இருந்த மக்கள் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர்.

கொல்லப்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் ஒருவரின் மனைவி தீர்ப்பு குறித்து பேசுகையில், முபாரக்கிற்கு மரண தண்டனை விதிக்கபட்டிருக்க வேண்டுமென கூறினார். இதற்கிடையே கெய்ரோவின் சில இடங்களில் முபாரக் ஆதரவாளர்களுடன் மக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். தீர்ப்பை தொடர்ந்து கெய்ரோ முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு இருந்தது.துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி எகிப்திலும் பரவி,30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த ஹோஸ்னிமுபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்தது. ஆயுள் தண்டனை பெற்ற முதல் அரேபிய ஆட்சியாளர் என்ற பெயரையும் முபாரக் பெற்றார்.

நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது மருத்துவப் படுக்கையில் படுத்து கொண்டு தீர்ப்பை கேட்டார். தீர்ப்புக்கு பிறகு அவர் சோகத்துடன் காணப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment