டெல்லி : கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அம்மாநில முதல்வர் மோடியின் பங்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார். குல்பர்க் ஸொஸைட்டி கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம் பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மோடிக்குத் தொடர்பில்லை என எஸ் ஐ டி அறிக்கை கொடுத்திருந்தது. குல்பர்க் ஸொஸைட்டி வழகுக்கு மட்டும் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்குத்தொடர்பில்லை என பாஜகவினரும் அவர்களது ஆதரவாளர்களும் கூறினர்.
இதுபற்றி விளக்கமாக நமது தளத்தில் வணங்காமுடி விடைப்பகுதியிலும் விவரிக்கப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிகஸ் கரி ராஜூ ராமச்சாந்திரன் தமது அரிக்கையைத் தாகல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:--
குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.காவல்துறை அதிகாரிகள் பலரும் சில அரசு வழக்கறிஞர்களும் சரியான முறையில் சட்டப்படிச் செயல்படவில்லை; கலவர வழக்குகளை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம் பற்றியும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.
மேலும் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக அப்போதைய உளவுப் பிரிவு துணை ஆணையரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.
ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட, சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா எனன்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ள வாக்குமூலம் முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 1 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.
அகமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது..
No comments:
Post a Comment