Islamic Widget

April 06, 2012

இந்தியா முழுவதும் காய்கறிகள் விலை கடும் உயர்வு!



இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பதுக்கலும், கருப்புச் சந்தையும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தக்காளி கிலோ ரூ.40க்கு டெல்லியில் விற்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஏற்றுமதிச் செய்யும் காய்கறிகளின் அளவு அதிகரித்துள்ளதும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலிருந்து வரும் காய்கறிகள் தாமதமாவதும் தக்காளி விலை உயர்வுக்கு காரணமாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆக்ரா, அஹ்மதாபாத், மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

No comments:

Post a Comment