Islamic Widget

April 26, 2012

எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் 25 இலட்சம் அபராதம்

எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் 25 இலட்சம் அபராதம்புது தில்லி : ராயல் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர் ஏற்றுமதி செய்வதற்கு வைத்திருந்த எருமை மாட்டு கறியை பறிமுதல் செய்த குஜராத் அரசுக்கு 25 இலட்சமும் மிருக உரிமை ஆர்வலருக்கு 25 இலட்சமுமாக மொத்தம் 50 இலட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 ராயல் எக்ஸ்போர்ட்ஸ் தாக்கல் செய்த மனுவில் தங்களுடைய 1 கோடி மதிப்புள்ள எருமை மாட்டு இறைச்சியை ராஜேஷ் ஹஸ்திமால் ஷா எனும் மிருக உரிமை ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம் தடை செய்யப்பட்ட பசு இறைச்சியை எருமை மாட்டு இறைச்சியுடன் கலந்து ஏற்றுமதி செய்ததாக கூறி குஜராத் அரசு பறிமுதல் செய்தது என்றும் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை தர வேண்டும் என்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 பறிமுதல் செய்த இறைச்சிகளையும் வண்டிகளையும் ராயல் எக்ஸ்போர்ட்ஸுக்கு திருப்பி தர வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபிரும் நிஜ்ஜாரும் குஜராத் அரசுக்கு 25 இலட்சமும் ஹஸ்திமால் ஷாவுக்கு 25 இலட்சமும் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது,

No comments:

Post a Comment