பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் S.நூர் முஹம்மது நாளை பதவி ஏற்க இருக்கும் சூழலில், J.ஹஸன் அலி என்பவர் விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக சமுதாய அமைப்புகள் எழுப்பி இருக்கும் வினாக்கள், பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிக்கை இவற்றிற்கிடையில், டாக்டர் S.நூர் முஹம்மது இன்று கூறுகையில்:
நடுநிலையாளர்களான H.அப்துல் ஹமீது, S.காஜா சுல்தான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் என்னை வந்து சந்தித்தனர்,
அதனடிப்படையில், சிதம்பரம் - கடலூர் ஆகிய ஊர்களில் இரு அமர்வுகள் நடத்தப்பட்டது, அப்போது பேசப்பட்டபடி B.ஹமீது கவுஸுக்கு ஜமாஅத் துணைத்தலைவர் பதவியும், M.E.அஷ்ரப் அலி, S.S.அலாவுதீன் ஆகியோர்களுக்கும் பொறுப்பு வழங்குவது என்றும் பேசப்பட்டபோது, ஊரின் ஒற்றுமையையும் நன்மையையும் கருதி, நான் சம்மதித்தேன். கூடுதலாக B.ஹமீது கவுஸுக்கு பைத்துல்மால் தலைவர் பதவியும் தர வேண்டும் என்றும் பேசப்பட்டபோது, நான் மவுனமாக கேட்டு கொண்டிருந்தேன்.
மேலும் தலைவராகிய நான் தவிர்க்க இயலாத சில நேரங்களில் ஜமாஅத் கூட்டங்களில் கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், துணைத்தலைவர் B.ஹமீது கவுஸுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க, ஒரு தீர்மானத்தினை கொண்டு வருகிறேன், சக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தால் அவ்வாறே செயல்படலாம் என்றேன்.
நான் முன்பு தலைவராக பதவி வகித்த போது பைத்துல்மால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதால், எனக்கு பைத்துல்மால் அமைப்பு விதிகள் தெரியவில்லை, நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே எனக்கு, பைத்துல்மால் அமைப்பு நிர்ணயச் சட்டவிதிகள் அடங்கிய புத்தகம் கா.மு.கவுஸ் மூலம் கிடைத்தது. அதை படித்து பார்த்த போது, ஜமாஅத் தலைவர் தான் பைத்துல்மால் அமைப்பின் தலைவராக இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், சட்டத்தின்படி B.ஹமீது கவுஸ் தலைவராக முடியாது என்பதால் அதற்கு உடன்பட மறுத்தேன்.
மற்றபடி அவர்கள் சொன்னதையும் கருத்தில் கொண்டு பைத்துல்மால் செயலாளராக M.E.அஷ்ரப் அலி, பொருளாளராக S.S.அலாவுதீன் என்று நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து அனுப்பிய போது, அவர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்ததுடன் பைத்துல்மால் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றனர். இச்சூழலில், காபந்து நிர்வாகமாக செயல்படும் இன்றைய ஜமாஅத் நிர்வாகம், இன்று காலை எனக்கு அனுப்பிய தபாலில், J.ஹஸன் அலி விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக, சமுதாய அமைப்புகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதில் கிடைக்காதவரை ஜமாஅத் நிர்வாகத்தை ஒப்படைக்கமாட்டோம் என்று எழுதி இருப்பதாக தெரிவித்தர்.
மேலும்: அவர் கூறுகையில், காபந்து ஜமாஅத் தலைவர் இருதரப்பையும் அழைத்து 5 நிமிடங்களில் சுமூக தீர்வு காணாமல், விடை கிடைக்கும் வரை நிர்வாகத்தை தரமாட்டோம் என்று சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை தருவதோடு, இது குற்றவியல் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்றரர் டாக்டர் S.நூர் முஹம்மது .
ஹஸன் அலி வெளியிட்டிருக்கும் துண்டு பிரசுரம் தொடர்பாக கேட்ட போது, "அவர் மீடியேட்டர்களில் ஒருவராக இல்லை, அவர் இதனால் பாதிக்கப்படவுமில்லை. மேலும், இது சம்பந்தமான வினா எழுப்ப இருமுறை நடைபெற்ற சந்திப்புகளில் கலந்துக் கொண்டோர்களுக்கு மட்டுமே இதில் முழு உரிமை இருக்கிறது என்றார்.
சமுதாய அமைப்புகள் இப்போது எழுப்பி இருக்கும் வினாக்கள் தொடர்பாக கேட்டபோது, " சமுதாய நலனில் அக்கறை உள்ள இவர்கள் என்னை நேரடியாக சந்தித்து கேட்டிருக்கலாமே, என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சந்திப்பு MYPNO:ஹம்துன் அப்பாஸ், MGF

No comments:
Post a Comment