Islamic Widget

February 01, 2012

புதிய ஜமாஅத் தலைவர் Dr.நூர் முஹம்மது ஜமாஅத் சான்றிதழ் பெற்று கொண்டார்




பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் தேர்தல் 12.02.2012 அன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30.01.2012 அன்று தொடங்கியது அன்றே Dr.நூர் முஹம்மது அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து எம்.கே.கலிக்குஜ் ஜமான் அவர்களும் மனுதாக்கல் செய்துயிருந்தார்.


இன்று 01.02.2012 எம்.கே.கலிக்குஜ் ஜமான் வாபஸ் பெற்றதை அடுத்து ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள் Dr.நூர் முஹம்மது அவர்கள் புதிய ஜமாஅத் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ்களையும் இன்று வழங்கினார்.








சான்றிதழ் பெற்றுகொண்ட Dr.நூர் முஹம்மது அவர்கள் சிறப்பான முறையில் செயல்படுவேன். இதற்காக அனைவரும் துஆ செய்யுங்கள் என்றும் தெரிவித்தார்.
 
நன்றி: tntjpno

1 comment:

  1. congrats dr umar ok shafi ismail sirs eppo ennapandranga

    ReplyDelete