Islamic Widget

February 03, 2012

அதிகரிக்கும் செல்போன் தொடர்பான குற்றங்கள்


mobile crimeபுதுடெல்லி:செல்போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி வரும்நிலையில், இதைப் பற்றி கவலை தரும் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.
வரும் 2013ம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களில் பதிவாகும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் செல்போன்கள் எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், இணையம் தொடர்பான சைபர் சட்ட வல்லுனருமான பவன் துக்கல் கூறியுள்ளார்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்ற அவர், இப்போது பெரும்பாலான குற்றங்கள் செல்போன் மூலமே நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார். மக்களின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க, தனியாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment