பரங்கிப்பேட்டை:சிதம்பரம் தாலுகா பகுதிகளில் போதுமான முத்திரைத்தாள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிதம்பரம் தாலுகாவிற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் கடந்த 15 நாட்களாக போதுமான முத்திரைத்தாள் கிடைக்கவில்லை.இதனால் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், அடமானம் வைப்பவர்கள், போக்கியம் கொடுப்பவர்கள், பவர் கொடுப்பவர்கள் என அனைவரும் அல்லாடி வருகின்றனர்.
தற்போது 20, 5,000, 15,000 ரூபாய்க்கான முத்திரைத்தாள் மட்டுமே உள்ளன. 50, 100, 500, 1,000 ரூபாய் முத்திரைத்தாள் இல்லை.முத்திரைத்தாள் கிடைக்காததால் பத்திரப்பதிவு செய்ய அலுவலகத்திற்கு கட்டவேண்டிய தொகைக்கான வங்கி "டிடி' யுடன் சேர்த்து பத்திர தொகைக்கும் "டிடி' எடுக்க வேண்டியுள்ளது. இதற்காக வங்கியில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.அனைத்து பகுதிகளில் போதுமான முத்திரைத்தாள் கிடைக்க பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment