பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை சங்கு மரம் மெஹர் வளாகத்தில் ஆக்ஸிஸ் வங்கி (AXIS BANK) தனது ATM-ஐ அமைத்துள்ளது. நேற்று காலை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் வங்கி உயரதிகாரிகள் கலந்து கொண்டு ATM செயல்பாட்டினை துவக்கி வைத்தனர். பரங்கிப்பேட்டையில் இதுவரை கிளை இல்லாத AXIS BANK. முதலில் தனது ATM-ஐ அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரங்கிப்பேட்டை நகரில் இதுவரை ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை ATM அமைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிளை அலுவலகத்திலேயே இரண்டு ATM
இயந்திரங்கள் அமைந்துள்ளது, அதில் ஒன்றொன்றை நகரின் மற்ற பகுதிக்கு மாற்ற வேண்டுமென்பதே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் விருப்பம்.
அரசுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் வங்கியில் இதுவரை ATM வசதி இல்லை,. இந்தியன் வங்கியில் ATM வசதி வேண்டுமென்று கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் உசேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி தலைமை அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
No comments:
Post a Comment