புதுடெல்லி:சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சகங்கள் ஆலோசனை செய்து வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் வின்சென்ட் எச். பாலா, மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது; ’மத்திய, மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், இடஒதுக்கீடு தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை அளித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படியும் பரிந்துரை செய்துள்ளது.
அதற்கு மாற்றாக,இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு 8.4 சதவீதத்தை தனியாக ஒதுக்கீடு செய்யும் படியும், அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்கும் படியும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஆலோசனை செய்துவருகின்றன. விரைவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment