மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் நகர குழு கூட்டம் நகர அலுவலகம் படிப்பகத்தில் நகர்குழு உறுப்பினர் ரஜினி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன், நகர்குழு உறுப்பினர்கள் தனசிங், அப்துல்காதர், ஸ்டாலின், அமர்நாத் மற்றும் நகர்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வண்டிப்பாளையம் சாலையை உடனே செப்பனிட்டு போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். பான்பரி மார்க்கெட்டுக்கு லாரிகள் மற்றும் பொது மக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனே திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட்டுக்கு சாலை அமைக்க வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை பாதாள சாக்கடை பணி முடிவடையவில்லை. பாதாள சாக்கடை பணி விரைந்து முடித்து கடலூர் நகரத்தில் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து சாலைகளும் போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும்.
தமிழக அரசு அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் நிறுத்தப்படுகின்றன.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவதால், உடனடியாக தமிழக அரசு மின்வெட்டை தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்.
மின்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடமும், வேறு மாநிலத்திலிருந்தும் மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்திட வேண்டும். தொடர்ந்து மின்வெட்டு இதே நிலை நீடித்தால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுமக்களை திரட்டி வருகிற 14-ந்தேதி தீப்பந்தம் ஏந்தும் போராட்டத்தை நடத்துவது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment