Islamic Widget

June 16, 2012

சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்

சிதம்பரம் புறவழிச் சாலையில் பஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் வெள்ளிக்கிழமை 12 பேர் காயம் அடைந்தனர்.
காட்டுமன்னார்கோயிலில் இருந்து சிதம்பரத்துக்கு பயணிகளுடன் தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ் சிதம்பரம் ஓமக்குளம் புறவழிச் சாலையில் வந்தபோது, புவனகிரியில் இருந்து சீர்காழி சென்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment