புயல் நிவாரணம் பெறாமல் விடுபட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்க புகார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி (படம்) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெறாமல் விடுபட்டவர்கள், அது குறித்த தங்களது மனுக்களை அளிக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் புகார் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம். மேலும் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என எம்.இந்துமதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment