Islamic Widget

January 26, 2012

அனுமதியின்றி புறவழிச்சாலையில் பஸ்கள்: புவனகிரி மக்கள் போராட்டம் நடத்த முடிவு



பரங்கிப்பேட்டை:புவனகிரி வராமல் பு.முட்லூர் புறவழிச்சாலை வழியாக பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் செல்வதை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.கடலூர் - சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாகச் செல்லும் புறவழிச்சாலையில் லாரி, கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.
பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு விரைவு பஸ் டிரைவர்கள் புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால், சிதம்பரம், கடலூர் பஸ் நிலையத்திலேயே புவனகிரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். புவனகிரி செல்லும் பயணிகள் இரவு நேரங்களில் பஸ் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.சி.முட்லூர் புறவழிச்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. புவனகிரி பொதுமக்கள் புறவழிச்சாலை வழியாக பஸ்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் காலை, இரவு நேரங்களில் பஸ்கள் புவனகிரி வழியை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. மோட்டார் வாகன ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் விரைவில் மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment