தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை முக்கூர் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் அமைச்சராக சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஒரு வாரத்திற்கு முன்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி., வேலுமணி வருவாய்த்துறையை கவனித்து வந்தார்.
தொட்டியம் தொகுதி எம்.எல்.ஏ சிவபதி மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொட்டியம் தொகுதி எம்.எல்.ஏ சிவபதி மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment