கடலூர்: போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது.இதுகுறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் போலீஸ் இரண் டாம் நிலை (ஆண், பெண்), சிறைக் காவலர் (ஆண், பெண்), தீயணைப்பு படை வீரர் பணிக்கு எழுத்துத் தேர்வு நாளை (8ம் தேதி) நடக்கிறது. விண்ணப்பித்துள்ள 7,097 பேருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு நடக்கிறது.அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர் கள் தக்க சான்றுகளுடன் கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அழைப்புக் கடிதம் பெற்றுக் கொள் ளலாம்.தேர்வு எழுத வருபவர்கள் 8ம் தேதி காலை 9 மணிக்குள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு வர வேண்டும். மொபைல் போன், கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
No comments:
Post a Comment