பரங்கிப்பேட்டை, கிள்ளை, காட்டுமன்னார்கோவில், புவனகிரி பேரூராட்சிகளில் நியமனக்குழு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவிலில் நியமன குழு உறுப்பினராக அ.தி.மு.க., ரவிச்சந்திரன், வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக சுயேச்சைகள் சசிகலா, சஞ்சய்காந்தி, அ.தி.மு.க., குல்சார், நூர்ஜகான், ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புவனகிரி: அ.தி.மு.க., பழனியப்பன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் வரி விதிப்பு மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக அ.தி.மு.க., சீனுவாசன், தே.மு.தி.க., சாரதாம்பாள், காங்., கிருஷ்ணன், பா.ம.க., ஜெகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை: நியமனக்குழு உறுப்பினராக அ.தி.மு.க., கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரி விதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக அ.தி.மு.க., கருணாகரன், தி.மு.க., காஜா கமால், கோமதி, மனிதநேய மக்கள் கட்சி தர்மபிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment