Islamic Widget

November 08, 2011

39 மனைவியர், 94 பிள்ளைகளுடன் ஓர் இந்தியர்



இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 39 மனைவியர், 94 பிள்ளைகள், 14 மரும(க்)கள், 33 பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார் ஸியோனா (ச்)சானா என்னும் கிராமத்தலைவர்.

ஸியோனாவின் மத/சாதியமைப்பில், ஆண், விரும்புகிற எத்தனை மனைவியரையும் 'வைத்து'க்கொள்ளலாம் என்றிருப்பதால், தனது மாபெரும் குடும்பம் குறித்து எவ்வித கிலேசமும் அதற்காக எவ்வித கோரிக்கையும் கொள்ளாமலேயே அவர் வாழ்ந்து வருகிறார்.
மலைக்குன்றில் உள்ள ஸியோனாவின் வீடு 100 அறைகளையும், நான்கு தளங்களையும் கொண்டிருக்கிறது. இக்குடும்ப வளாகத்திற்குள் சொந்தத்தில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், பணிக்கூடங்கள், கால்நடைவளர்ப்பகங்கள், முழு குடும்பத்திற்கும் தேவையான வகையில் காய்கறி தோட்டம் என்று சகலமும் அமைந்துள்ளனவாம்.

39 மனைவியருக்குக் கணவனாகவும் உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும்  கடவுள் தனக்கு அருள் புரிந்துள்ளதாகக் கூறும் ஸியோனா, தான் இன்னும் இன்னும் திருமணம் செய்து குடும்பத்தைப் பெருக்க விரும்புவதாகவும், இதற்காக அமெரிக்கா தொலைவு போக நேர்ந்தாலும் சரி என்று கூறியுள்ளார். ஸியோனாவின் மத அமைப்பில் 4,000 உறுப்பினர்கள் உள்ளனராம் .

இக்குடும்பத்தில் ஓர் இராணுவ ஒழுங்கு நடைபெறுவதாகவும், மூத்த மனைவியான 69 வயது ஸைதாங்கி மற்ற உறுப்பினர்களுக்கான குடும்பப் பணிகளைத் தீர்மானிக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment