Islamic Widget

March 14, 2011

பரங்கிப்பேட்டை: தேர்தல் விதிமுறை மீறியதாக 64 வழக்குப்பதிவு

பரங்கிப்பேட்டை: தேர்தல் விதிமுறைகள் மீறியதாக கடலூர் மாவட்டத்தில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனையொட்டி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் அகற்றப்படாமல் இருந்த சுவர் விளம்பரங்கள், பேனர்கள் குறித்து தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்குப் பதியப்பட்டது.
கடலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி திட்டக்குடி, சிதம்பரம், கிள்ளை, சிதம்பரம் நகர், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், ரெட்டிச்சாவடி, நெய்வேலி டவுன்ஷிப், மந்தாரக்குப்பம் ஆகிய பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., வினர் மீது 18 வழக்குகளும், வி.சி., மீது 18 வழக்குகளும், அ.தி.மு.க.,-16, தே.மு.தி.க., -7, பா.மக.,-2, காங்.,-1, மூ.மு.க., 1, இ.ஜ.க., 1 உட்பட 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Source: dinamalar

No comments:

Post a Comment