இரட்டை மெழுகுவத்தி அல்லது தராசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.அ.தி.மு.க. கூட்டணியில் மூன்று தொகுதிகள் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஞாயிற்றுக் கிழமையன்று திருநெல்வேலியில் கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சியை நன்றாக நடத்தினர். நாங்கள் போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இரட்டை மெழுகுவத்தி அல்லது தராசு சின்னம் கேட்டுள்ளோம்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு கட்சித் தலைவரின் பெயரை வைப்பது சரியல்ல. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு அந்தப் பெயரை நீக்க வேண்டும். முஸ்லிம் லீக் கட்சியை தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாக மாற்றிவிட்டனர்; முஸ்லிம் லீக்கிற்கு கொடுத்த சீட்டை பறித்துள்ளனர்.
இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் கூறினார்.
No comments:
Post a Comment